Type Here to Get Search Results !

தீபப் பயிற்சி மற்றும் கண்ணாடி பயிற்சி சூக்கும வெளிபாடு ஏற்படும். அந்த சமயத்தில் உடலை விட்டு சூக்குமம் வெளியேறுகிறது.

0


 ஜீவகாந்தம்:

ஜீவகாந்த விளக்கம்:

உயிர்த்துகளிலிருந்து வெளியேறக்கூடிய இறைத் துகளே ஜீவகாந்தம் என்று பெயர். உடல் மன இயக்கத்திற்கு ஜீவகாந்தமே அடிப்படையான ஆற்றல் ஆகும் ஜீவகாந்தம் உடல் முழுவதும் பரவி இருக்கிறது. இதனை பிரணவ உடல், காரண உடல், காந்த உடல் என்று அழைக்கப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Bio magnetism என்று கூறுவர்.


மனம்:

உயிரினங்களில் ஜீவகாந்தமே மனமாக இயங்குகிறது. ஜீவகாந்தம் இயங்கும் போது மூளையின் வழியாக எண்ணமாகவும் ஐம்புலன்களின் மூலம் உணர்வாகவும் வெளிப்படுகிறது. ஜீவகாந்த ஆற்றலையே மனம் எனக் கூறுகிறோம்.


ஜீவகாந்த பெருக்கம்:

ஜீவகாந்தமும் வான் காந்தமும் இணைந்தே செயல்படுகின்றன. வான் காந்தமானது எங்கும் நிரம்பியுள்ளது. வான் காந்தத்தை மனித அறிவாள் கிரகித்துக் கொள்ள முடியும். மனிதனுக்கு வான்காந்தம் மூலமாகவும், உணவு மற்றும் நீரில் இருந்தும், பூமியின் மையத்தில் ஏற்படுகின்ற அணுசிதைவு மற்றும் அணுகூட்டின் மூலமாகவும், காற்றில் இருந்தும் ஆற்றல் கிடைக்கிறது. கிடைக்கக்கூடிய ஆற்றலானது மனிதனின் ஜீவகாந்தத்தில் கலந்து விடுகிறது. முறையான பயிற்சியின் மூலமாகவும் ஜீவகாந்தத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். இரண்டு பயிற்சிகள்  ஜீவகாந்த பெருக்கத்திற்கு உள்ளன. அவை:

தீபப் பயிற்சி மற்றும் கண்ணாடி பயிற்சி ஆகும். தீபப் பயிற்சி மற்றும் கண்ணாடி பயிற்சியை கண்களால் பார்த்து செய்ய வேண்டும். ஜீவ காந்த சக்தியானது தீபப்பயிற்சி மற்றும் கண்ணாடி பயிற்சி மூலமாக ஒலி அலையாக தன்மாற்றம் அடைந்து குவிகிறது. பிறகு உள்ளங்கையால் கண்களை மூடி, உடலை கவனிக்கும்போது  ஜீவகாந்தம் பெருகி விரிவடைகிறது. 

மனம் இவ்வாறு குவிதல் மற்றும் விரிதல் என்ற இயக்கத்தின் மூலமாக காந்த சக்தி தானாகவே விரும்பி மாற்றிக்கொள்வதால் எந்த சமயத்தில் குவிய வேண்டுமோ அந்த சமயத்தில் குவியும்,  அதுமட்டுமில்லாமல், இந்த பயிற்சியின் மூலமாக கண்ணில் இருந்து செல்லும் அலை திணிவோடு சென்று பொருள் மீது படும். காலை 4:30 முதல் 7 மணிக்குள் தீப பயிற்சியையும் கண்ணாடி பயிற்சியையும் செய்வது நல்லது.

இந்த பயிற்சியை சூரிய உதயத்திற்கு முன் செய்வது நல்லது. அதிகாலை நேரத்தில் பூமியின் சுழற்சி  காரணமாக சூரியனின் ஒலிக்கதிர்கள் பூமியின் மீது படுகின்ற கோணத்தின் காரணமாக, பூமியின் மீது வான்காந்தம் அதிகமாக வந்து கொண்டு இருக்கும். அதிகாலை 3 முதல் 6 மணி வரை உள்ள நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என கூறுவர். இந்த நேரத்தில் தீபப் பயிற்சியையும்,கண்ணாடி பயிற்சியையும் செய்யும் போது வான்காந்த ஆற்றல் உடலுக்கு அதிக அளவில் கிடைக்கிறது. வாரம் இரு முறை இந்த பயிற்சியை செய்வது மிகவும் நல்லது.

தீப ஒளியை கண்களால் சிறிது நேரம் பார்த்து, அதன் பிறகு உள்ளங்கைகளால் கண்களை மூடி, உயிர் ஆற்றல் உடல் முழுவதும் பரவுவதை கவனிப்பது ஆகும். தீப ஒளியை தினமும் பார்த்து பயிற்சி செய்யும் போது, தீப ஒளியிலிருந்து வருகின்ற அலையின் தன்மைக்கு ஏற்ப, ஜீவகாந்தம் நம்முடைய உடலில் அதிகரிக்கிறது. அதிகரிக்கும் சமயத்தில் கண்களை மூடும் போது, எந்த அளவிற்கு அதிகரிக்கிறதோ அந்த அளவிற்கு மீண்டும் வான்காந்தத்தோடு தொடர்புகொள்கிறது. இதன் காரணமாக உடலுக்குள் வான்காந்த ஆற்றல் திணிவு பெறுகிறது.


தீப பயிற்சியின் பயன்கள்: 

  • நோயினை குணப்படுத்த முடியும். 
  • தீட்சை அளிக்கக்கூடிய அளவிற்கு தேவையான ஆற்றல் பெருகும்.
  • மூளை செல்கள் மற்றும் உடல் புத்துணர்வு பெறுகிறது.
  •  வான்காந்த தொடர்பு கிடைக்கிறது.
  • கண்களில் தெய்வீக ஆற்றல் பெருகும். 
  • முகவசியம், முகப்பொலிவு பெருகும்.


கண்ணாடி பயிற்சி:

தியான நிலையில் உட்கார்ந்து கண்கள் திறந்த நிலையில் ஒரு கண்ணாடியின் முன்பு நமது முழு உருவத்தையும் கண்களால் சிறிது நேரம் பார்க்க வேண்டும். பின்பு   கண்களை மூடி உள்ளங்கை மூலமாக கண்களை பொத்தி, உயிராற்றல் உடல் முழுவதும் பரவுவதை கவனிக்க வேண்டும் இதுவே கண்ணாடி பயிற்சி ஆகும். உடலை இயக்குவதற்காக உடலில் ஓடிக்கொண்டிருக்கும் ஜீவகாந்த சக்தியானது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மனமாக மாறி, அதற்கு அடுத்தபடியாக அதையெல்லாம் உணர்ந்து கொள்ளக்கூடிய மனமாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

பரவெளியிலிருந்து உருவாகிய விண்கல் இயங்கிக் கொண்டிருக்கும்போது, இறைத்துகள்களே விண்ணில் இருந்து வெளியேறி காந்த அலைகளாக வருகின்றன. விண் என்ற அணுக்களின் கூட்டுக்கு தக்கவாறு பஞ்சபூதங்கள் உருவாகின்றன. பஞ்சபூதங்களில் உள்ள காந்த ஆற்றலின் தன்மாற்றமே அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐந்து வகை விளைவுகள் ஆகும். அறிவானது இவற்றை உணர மனமாக இயங்குகிறது.

அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம் என்ற ஐந்து வகை தன் மாத்திரை மூலமாக ஜீவகாந்த ஆற்றலானது குறிப்பிட்ட அளவில் செலவாகி உடல் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதேபோல அழுத்தம்,ஒளி, ஒலி, சுவை, மணம் என்ற ஐந்து வகை உணர்வுகள் வழியாக ஜீவகாந்த ஆற்றலானது செலவாகி மன இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

ஜீவகாந்தம் எப்போதும் வெளிவருவதற்கு மன இயக்கம் மற்றும் உடல் இயக்கம் உட்பட்டு இருக்கும். ஜீவகாந்தம் உடற்கருவிகளின் மூலமாக குறைந்தபட்ச அளவாக வெளியேறிக் கொண்டே இருக்கிறது. ஒரு பொருளை கண்களால் பார்க்கும் போது அதிலிருந்து ஒரு யூனிட் ஒளி வருகிறது என்று வைத்துக் கொண்டால், அந்த சூழ்நிலையில் இருக்கக்கூடிய ஒளி அளவிற்கு, நம்முடைய ஜீவகாந்த ஆற்றலும் அதிகரிக்கிறது. அந்த சமயத்தில் ஜீவகாந்த ஆற்றல் உடலில் ஒளியாக மாறி ஏற்றம் பெற்று, விரயம் ஆகிக்கொண்டே இருக்கும். அவ்வாறு தன்மாற்றம் அடைந்து ஒளி அலை தடுத்து திரும்பும் போது, அந்த தடையையே பார்த்தல் அல்லது உணர்தல் என கூறுகிறோம்.

அதனால் அறிவுக்கு ஒளி அலையை தடுத்து திரும்பும் பொருள் நன்றாகவே தெரிகிறது. எந்த ஒரு பொருளை நாம் பார்த்தாலும் அந்த பொருள் ஜீவகாந்தம் அளவில் வடிவம் எடுக்கிறது. ஒரு மரத்தை நாம் பார்க்கும் போது, மனமானது அந்த மரத்தின் அளவிற்கு வடிவம் எடுக்கிறது. அந்த சமயத்தில் ஜீவகாந்த ஆற்றல் செலவாகிறது. ஆனால் நம்முடைய உருவத்தை கண்ணாடியில் நாம் பார்க்கிறோம். நம்முடைய உடலில் ஒரு வடிவம் உள்ளது. ஒரு பிரதிபலிப்பானது(நிழல்) அலை இயக்கத்தின் திணிவில் ஒரு வடிவம் உள்ளது. நம்முடைய வடிவம் தான் கண்ணாடியில் தெரிகின்ற நிழல்(பிரதிபலிப்பு) வடிவமாக எடுக்கிறோம். 

ஆகவே நாம் எடுக்கும் நிழல் வடிவமும், நம் வடிவமும் ஒன்றாகத்தான் இருக்கின்றன. கண்ணாடியில் நம்மையே நாம் பார்க்கும் போது மனமானது ஓர்மை நிலை அடைகிறது. அதனால் உடலில் காந்தத் திணிவு அதிகரிக்கிறது. பார்க்கும் பொருள் வேறு, நாம் வேறு என்று இருக்கும் போது ஜீவகாந்தம் விரையம் ஆகிறது. கண்ணாடியில் நம் வடிவத்தையே பார்க்கும்போது ஜீவ காந்த செலவு உண்டாகாது.


சூக்குமா வெளிப்பாடு:

பொதுவாக நாம் எந்த ஒரு பொருளை பார்க்கும் போதும் ஜீவகாந்த ஆற்றல் வெளியேறும். மேலும் ஜீவகாந்தத்தை உற்பத்தி செய்யக்கூடிய உயிர்த் துகள்களும் வெளியேறி செலவாகும்.

உதாரணமாக, மழை பெய்யும் போது தண்ணீர் வேகமாக ஓடுகிறது, நீரின் அளவு அதிகரிக்கும் போது அந்த நீருடன் இருக்கும் அதிக எடையுள்ள கல்லும் மண்ணும் அடித்து செல்லும். ஆனால் நீரின் வேகத்திற்கு ஏற்ப கல்லும் மண்ணும் ஓரளவு வேகத்தில் தான் செல்லும். அதாவது நீர் வேகமாகவும், கல்லும்,மண்ணும்  நீரைவிட குறைந்த வேகத்திலும் செல்லும். அதேபோலத்தான் ஜீவகாந்த ஆற்றல் வெளியேறும் போது ஜீவகாந்த அலையை உற்பத்தி செய்யக்கூடிய உயிர்த்துகள்களும் வெளியேறி விடுகின்றன. இதையே சூக்கும தேகம் அல்லது சூக்கும வெளிபாடு(Astral Projection) எனக் கூறுகிறோம்.

 தொடர்ந்து கண்ணாடி பயிற்சியை செய்யும்போது சூக்கும வெளிபாடு(உயிறாற்றலின்) இரண்டு நிமிடத்தில் ஏற்படும். அந்த சமயத்தில் உடலை விட்டு சூக்குமம் வெளியேறுகிறது. வெளியேறக்கூடிய உயிர்த்துகள்களின்(சூக்குமத்தின்) இடத்தை நிரப்புவதற்காக அந்த இடத்தில் குறைவை சரி செய்வதற்கு, வான்காந்த களத்தில் இருந்து தானாகவே ஆற்றல் உடலுக்கு வந்துவிடும்.

விண் என கூறப்படும் இறைத்துகளான உயிர்த்துகளுடன் கூடிய வான் காந்தத்தை சேர்ந்து இருப்பதன் காரணமாக உயிறாற்றல் உடலில் அதிகரிக்கும். தினமும் கண்ணாடிப் பயிற்சியை செய்து பழகும் போது உயிராற்றலின் செலவு குறையும். வான்காந்த ஆற்றலின் அளவு அதிகரிக்கும். கண்ணாடி பயிற்சி சிறிது நேரம் செய்யும்போது, சூக்கும வெளிப்பாட்டின் விகிதாச்சாரம் உயரும். அதனால் உயிராற்றலின் திணிவு அதிகரிக்கும்.

ஆரம்ப காலகட்டத்தில் ஐந்து சதவீதம் மட்டுமே சூக்குமம் வெளியேற தொடங்கும், தினமும் பயிற்சியை இடைவிடாது செய்ய செய்ய 10%, 20%, 30% என அதிகரித்து  51% சூக்கும வெளியேற்ற அளவு அதிகரிக்கும். அப்படி சூக்குமத்தின் வெளிப்பாடு 51% மேல் வரும்போது பயிற்சி செய்யும் மாணவன் மற்றொருவரை பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம்., அவர்களுக்கு தங்களுடைய நினைவே இருக்காது, முழுமையாக அது மறைந்து, பயிற்சியாளரின் பார்க்கக்கூடிய தன்மையானது, அவர் மீது உள்ள மதிப்பு, பெருமையாகவே, அதாவது பார்வையாளரின் தன்மையாகவே மாறிவிடுவார்கள். 

பிரபஞ்சம் முழுவதிலும்  அவர் இருப்பதாகவே உணர்வார்கள். அது மட்டுமல்லாமல், பயிற்சி செய்யும் மாணவனை ஒருவர் எங்கிருந்தோ நினைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், நினைத்த அடுத்த கனமே, பயிற்சி செய்யும் மாணவன் மனதால் வாழ்த்து கூறி, நினைப்பவருக்கு நன்மை செய்ய முடியும். அத்தகைய அளவில் உடனடியாக உதவி செய்யக்கூடிய ஒரு செயலானது நடந்து விடும். சூக்கும வெளிப்பாடு(Astral projection) மேலும் அதிகரிக்க அதிகரிக்க, உடல் ஒரு வாகனம், உயிர் ஆற்றல் தான் முக்கியம் என்ற எண்ணம் உண்டாகும். அந்த சமயத்தில் ஒருவிதமான அமைதி நிலை(Trans state) தோன்றும். இதுவரையில் இந்த உடல் தான் நான் என்ற எண்ணமானது மாறி உயிர்தான் நான் என்ற எண்ணம் உண்டாகும்.


முகவசியம் ஜெகவசியம்:

கண்ணாடி பயிற்சியை தொடர்ந்து செய்ய செய்ய உயிராற்றல் அதிகரிக்கும். அதன் காரணமாக நம்மை சந்திக்க வருபவர்களும் ஒரு இனிமையான உணர்வை பெறுவர். நம்மிடமே அதிக நேரம் பேச வேண்டும், நம்முடனே இருக்க வேண்டும், உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம், நம்பிக்கையும்,  நட்புணர்வும் உண்டாகும். இதையே முகவசியம் என கூறுவர். எங்கேயோ நாம் இருக்கிறோம், ஒரு பொருள் நமக்கு ஏதோ தேவையாக இருக்கும். இந்தப் பொருள் நமக்குத் தேவைப்படாது, இவருக்கு தேவையாக இருக்கும் என்று தெரிந்தவரோ அல்லது அறிமுகம் இல்லாதவரோ நம்மிடம் அந்த பொருளை கொண்டு வந்து கொடுத்தார்கள். எந்த காரணமும் இல்லாமல் ஒரு பொருளை தேடி போகாமலேயே அந்த பொருள் நம்மிடம் வந்து சேரும். 

பிறர் தானாகவே உதவமுன் வருவார்கள். பல அற்புதங்கள் நம்முடைய வாழ்வில் நடக்கும். இதையே ஜெகவசியம் எனக் கூறுவர். முகவசியம் ஜெகவசியம் என்ற இரண்டும் கண்ணாடி பயிற்சி மூலமாக அதிகரிக்கும். கண்ணாடிப் பயிற்சியை  தொடர்ந்து செய்து வரும் காலகட்டத்தில் உணர்ச்சி வயப்பட்ட தன்மைகளான பேராசை சினம் கவலை போன்ற மூன்று வகைகளில் உயிர்ச் சக்தியை விரையம் செய்யாமல் முடிந்த வரையில் விழிப்புணர்வோடு இருந்தால் ஆன்ம சக்தியானது பெருகிக்கொண்டே இருக்கும். 

ஆசிரியராக இருந்து குண்டலினி தீட்சை மூலமாக ஆற்றலை மற்றவருக்கு கொடுத்து  எந்த அளவிற்கு உதவி செய்துகொண்டே இருக்கிறோமோ அந்த அளவிற்கு ஆற்றல் பெருகிக்கொண்டே இருக்கும். ஆகவே என்ன சமயத்திலும் முடிந்த அளவிற்கு ஈகையுணர்வோடு, பிறருக்கு உதவி செய்ய தயாராக இருக்கும்.


நோய் குணமாக்குதல்:

கண்ணாடி பயிற்சி மூலமாக பெருகி கொண்டு இருக்கும் ஜீவ காந்த ஆற்றலை கொண்டு நோயை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு, நமது கண்கள் தண்ணீரை பார்த்து ஜீவகாந்த ஆற்றலை பாய்ச்சும் போது பாத்திரத்தில் உள்ள தண்ணீர் ஆவியாகி மேலே செல்வது போல தோன்றும். இதுவே கண்ணில் இருந்து வரக்கூடிய ஜீவகாந்த ஆற்றல் ஆகும். இந்த ஜீவகாந்த ஆற்றலையே உயிர் சக்தியின் அலை எனக் கூறுகிறோம். 

கண்ணாடி பயிற்சி மூலமாக உயிரற்றல் திணிவு பெறுவதன் காரணமாக பாத்திரத்தில் உள்ள நீரை கண்களால் உற்று பார்க்கும் போது நீரின்மேல் உயிராற்றல் படர்வதை பார்க்க முடிகிறது. இரவு நேரத்தில் இருட்டில், நீரின் மேல் படர்வதை காண முடியாது. ஜீவகாந்த அலையானது பாத்திரத்தில் உள்ள நீரை சிறிது நேரம் பார்க்கும் போது பாய்ந்து விடுகிறது. நோய் உள்ளவருக்கு இந்த நீரை கொடுக்கும் போது எந்த ஒரு நோயும் குணமாகிவிடும். இவ்வாறு ஜீவகாந்த ஆற்றல் பாய்ச்சப்பட்ட நீரைப் பயன்படுத்தி நோயை குணப்படுத்த முடியும்.


கண்ணாடி பயிற்சியின் நன்மைகள்:

ஒருவரை வாழ்த்தும்போது விரைவில் வெற்றி உண்டாகும். நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். ஜெகவசியம் உண்டாகும், விரும்பிய பொருளானது தானாகவே நம்மிடம் வந்தடையும். முக வசியம் உண்டாகும், அதாவது பிறருக்கு உயர்ந்த மதிப்பு உண்டாகும். பிறருடைய  நோயை தீர்க்க முடியும். வாழ்க்கை குறைகள் நீங்கும், கர்ம வினைகள் படிப்படியாக நீங்கும். உடலில் ஏற்படும் ஜீவகாந்த ஆற்றல் திணிவின் காரணமாக, பயம், பதட்டம், பரபரப்பு, மனகுழப்பம் இவை அனைத்தும் குறைந்து தியானம் செய்வதற்கு உறுதுணையாக இருக்கும். குண்டலினி ஆசிரியராக உயிர் ஆற்றலை மற்றவர்களுக்கு பாய்ச்சி  தீட்சை கொடுப்பதற்கு உதவும். கண்ணாடி பயிற்சியும் தீபப் பயிற்சியும் செய்து உடலில் ஜீவகாந்த ஆற்றலை பெருக்கிக் கொள்ளலாம். மன வளமும், உடல் நலமும் பெற்று வாழ்வில் வெற்றி பெறலாம்.


:- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

Tags

Post a Comment

0 Comments