Type Here to Get Search Results !

சக்தி என்பது ஜீவசக்தியான வாயு

0

சக்தி என்பது ஜீவசக்தியான வாயு:

சக்தி என்பது ஜீவசக்தியான வாயுவாகும். அந்த ஜீவசக்தியே உடலை இயக்குகிறது. அதுவே பெண்ணாகவும் வாசுகி என்ற பாலப் பெண்ணாகவும் நம்முள் இருக்கிறது. அந்தவாசுகி என்னும் பாலப் பெண் சக்தி நம்மை விட்டு வெளியே போய்விட்டால் வேதசாஸ்திரங்கள் ஒன்றும் இல்லாமல் போய்விடும். அந்த வேதசாஸ்திரங்கள்  நம்முள் அடங்கி இருக்கிறது. 

அதனால் அந்த வாசுகி பெண்ணைத் தான் கல்யாணம் செய்ய வேண்டும். இதுதான் அழியாத பாரிகைப்பெண். அந்த பெண்ணை எவ்வாறு கல்யாணம் செய்வது என்றால் நம்முள் கதாகதஞ் செய்யும் கெட்ட சுவாசஞ் செய்ய கூடிய வாசுகி என்னும் பாலப்பெண் சாதாரணமாக பன்னிரண்டு அங்குலம் அதோகதியாய்  போய்க்கொண்டே இருக்கிறது. அது எந்த வாசல் வழியே போய்கொண்டு இருக்கிறது என்றால் சதா மூக்கு துவாரத்தின் வழியாக அதோகதியாய் போய்க் கொண்டே இருக்கிறது. 

அதுதான் நாம் சாகுங்கால் அதை அந்த வழியில் போகவிடாமல் தடுத்து நம்முடைய உற்பத்தி ஸ்தானத்தில் அதாவது புருவமத்தியாகிய சுழுமுனையில் மேல் நோக்கி மெதுவாக லேசாக ஊத வேண்டும். இந்த வாசுகி என்னும் பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டும். தன்னிலிருந்து கூடிய சக்தி அந்த மூக்கு துவாரத்தின் வழியே அதோகதியாய் போய்க் கொண்டு இருக்கிறது. அந்த சக்தி இல்லையேனில் சிவனில்லை,சிவனில்லை எனில் சக்தி இல்லை, சக்தி என்பது ஜீவசக்தியான வாயு.

 சிவன் என்பது அக்கினி சொருபமாய் உள்ள ஜோதி சொருபம் ஆகும். அந்த ஜோதி என்பது ஜீவசக்தியான பார்வதி என்னும் வாயுவானது வெளியே போய்விட்டால் அக்கினியான ஜோதி அணைந்து போய்விடும். இப்படிதான் நமக்கு மரணம் உண்டாகி செத்துப்போவதற்கு இடமாகிறது. இதைதவிர எமன் என்று ஒருவன் வந்து கொண்டுபோவது இல்லவே இல்லை.

தன்னிடைய ஜீவசக்தியை ஊர்துவ கதியாக்கி சுழுமுனையை முட்டித்திறந்து அந்த இடத்தில் இருக்கும் சிவலிங்கமான ஜோதியை கட்டிப்பிடித்து நம் ஜீவசக்தி அதோகதியாய் போகாமல் எமவாசலை மூடிக்கொண்டு மார்க்கண்டேயரென்று பெயர் கொண்டாடப்படுவோம். இந்த வழிதான் உண்மையான சிவன் கோவில். 

இது போலவே நாமும் பூஜை மற்றும் பக்திகள் என்று  தவம் செய்ய வேண்டிய இந்த உண்மையான வழியை விட்டுவிட்டு வெளியில் இருக்கும் கருங்கல்லையும் செம்பையும்,வெள்ளியாகிய பஞ்சலோகங்கலால் செய்த பொம்மைகளையும் காகிதத்தால் பலவண்ணங்களில் எழுதப்பட்ட பொம்மைகளையும் கட்டிப்பிடித்து கதறி கத்தினால் தன்னிலிருக்கும் ஜீவனை சிவன் அதோகதியாய்ப் போவதல்லாமல் சிவபாதம் சேர்வது இல்லவே இல்லை. ஜீவசக்தியை வெளியே விடாமல் ,ஜீவசக்தியை தடுத்து நிறுத்தி ஜீவனை காப்பாற்றிகொள்ள கூடிய விஷியம் தெரிந்த அவனே ஈஸ்வரமதத்தவன் என்றாகிறான். மற்றவன் ஈஸ்வரமதத்தவன் ஆக முடியாது. இந்த துஷ்ட்ட வழியை விட்டுவிட்டு முன் சொன்ன எதார்த்த வழியைக் கைக்கொண்டு எதார்த்த நம் ஆத்ம ஜோதியைக் கட்டிப்பிடியுங்கள். 

கண்ணப்பனாயினார் மோஷ்சம் அடைந்த விவரம்:

கண்ணப்பனாயினார் மோஷ்சம் அடைந்த விவரம் என்னவெனில் காளாஸ்திரியிலிருக்கும் சிவனுக்கு பன்றி மான் பச்சி முதலிய மிருகங்களின் மாமிசத்தை எச்சிலாக்கி ஈஸ்வரனுக்கு ஊட்டிக் கொண்டிருந்ததாகவும் ஈஸன் கண்ணொன்றில் ரத்தனீர் வடிவதைக் கண்ட கண்ணப்பன் தன் கண்ணில் ஒன்றைத் தோண்டி ஈஸன் கண்ணுக்கு வைக்க மற்றொரு கண்ணிலும் ரத்தனீர் வடிவதை கண்ட கண்ணப்பன் தனது கால் பெருவிரலால் ஈஸன் கண்ணொன்றை மிதித்துக்கொண்டு மற்றொரு கண்ணைப் பிடுங்கும் சமயம் தோன்றி வரம் தந்ததாகவும் பெரிய புராணங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மைதான் சந்தேகமில்லை!. 

ஆனால் இதன் உண்மையான எதார்த்த தத்துவம் சொல்கிறோம் கேளுங்கள். காலாஸ்திரி என்பது நம்முடைய ஸ்தூல சரீரம் ஈஸன் இருக்குமிடம் நெற்றி மையம் ஆகும். ஜீவனை வேடமென்னும் கண்ணப்பன் தைரியம் என்னும் அன்பினால் காமரூபிணி வனத்திலிருக்கும் தாடகையும் பொருமை என்ற புலியையும், மதமென்ற யானையையும்,ஆச்சரியமென்ற மானையும் "நான் நான்" என்ற சிங்கத்தையும்,கொன்று ஈஸனுக்கு பூஜை செய்தார். 

அதெப்படியெனில் சதாகாலமும் வெளியே போய்க் கொண்டிருக்கின்ற சுவாசமாகிய வாயுவை உள்ளே ஈஸன் இருப்பிடமான அக்கினிக் கண்ணென்ற சுழுமுனையில் செலுத்தி வெளிப்பார்வையில்லாமல் மேல் முகமாய் அகமுகமாய் ஊர்துவ பார்வையாகவே இருந்து,என்றும் அழியாத ஜீவேஷ்வர ஐக்கியம் பெற்றார். இதுதான் கண்ணப்பனாயனார் சரித்திரத்தின் உண்மையான வழியாகும். 

இந்த உண்மையான வழியை விட்டு விட்டு வெளியிலிருக்கும் மிருகங்களின் மாமிசத்தை எச்சிலாக்கி ஈஸனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாலும் அவனுக்கு பாவம்தான் சேருமே தவிர புண்ணியம் என்பது கிடையாது. இதுதான் உண்மையான எதார்த்த வழி. 


    
                        
Tags

Post a Comment

0 Comments