Type Here to Get Search Results !

மன அலைச்சுழலும் அதன் செயல்பாடுகளும். மனமானது இறைநிலையோடு கலந்து விடும் நிலையையே சமாதி

0
 

மன அலைச்சுழல்:-

மன அலைச்சுழலும் அதன் செயல்பாடுகளும்:

மனம் என்பது மாபெரும் சக்தி கொண்டது. அந்த மதிப்பிற்குரிய மனதை மனதால் தான் உணர முடியும். மனம் இயங்கும் போது அதனுடைய இயக்கம் சுழற்சி அலைகளை கொண்ட காந்தமாக இருக்கும். மனதின் சுழற்சி அலைகளை அதிர்வு எண்(mental Frequency) என கூறுகிறோம்.

"Electro Encephalogram" (EEG) விஞ்ஞான கருவியின் மூலமாக மனித மனதை ஆராய முடியும். விஞ்ஞானிகள் மனமானது வினாடிக்கு ஒன்று முதல் 40 சூழல் வரையில் இயங்கிக் கொண்டு உள்ளது என்ற உண்மையைக் கண்டுபிடித்தனர். உளவியல் அறிஞர்கள் பொதுவாக மன அலைச்சுழல் இயக்க நியதியை நான்கு பிரிவுகளாக வகுத்துள்ளார்கள். அவை:-


  • பீட்டா அலை(beta wave) 40 முதல் 14 சுற்றுகள்/ விநாடி.
  • ஆல்பா அலை(Alpa wave) 13 முதல் 8 சுற்றுகள்/விநாடி.
  • தீட்டாஅலை(Theta wave) 7 முதல் 4 சுற்றுகள்/வினாடி.
  • டெல்டா அலை(Delta wave) 3 முதல் 1 சுற்றுகள்/ வினாடி.

ஆகியவையாகும்.


ஐந்து புலன்களின் மூலமாக மனித மனம் இயங்கும்போது பீட்டா அலையில் இயங்குகிறது. வினாடிக்கு 14 முதல் 40 சுழற்சி வரை  மன அலைச்சுழல் இயங்குகிறது. அவ்வாறு இயங்கும் போது மனமானது உணர்ச்சிவயப்பட்ட எண்ணங்களை உண்டாக்குகின்றன. உணர்ச்சிவையப்பட்ட எண்ணங்கள் உண்டாகும் போது ஜீவகாந்த ஆற்றல் அதிகமாக செலவாகிறது. மனமானது குணமாகவும், வடிவமாகவும் மாறுகிறது. 

தவம் செய்யும் போதும் தூங்கும் சமயத்திலும் மனமானது ஆல்பா அலைக்கு வருகிறது. அந்த சமயத்தில் வினாடிக்கு 8 முதல் 13 வரையில் மன அலைச்சுழல் இருக்கும்.ஆனால் மனமானது தூக்கத்தின் போது விழிப்பு நிலையில் இருக்காது. விழிப்பு நிலையில் இல்லாத போது செயல்பாடுகளும் அறிவுப் பெருக்கமும் இருக்காது. தவம்(தியானம்) செய்யும் போது மனமானது ஆழ் நிலைக்கு வருகிறது. ஆல்பா நிலையில் தூங்காமல் முழு விழிப்பு நிலையில் இருப்போம்.

"தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்" என்று இந்த சுகத்தை தான் பத்திரகிரியார் பாடியுள்ளார். தவம் செய்யும்போது மனமானது நுண்ணிய நிலைக்கு வருகிறது. மனமானது இந்த நிலையில் உணர்ச்சி நிலையிலிருந்து அமைதி நிலைக்கு செல்கிறது. ஜீவகாந்த ஆற்றலின் செலவானது குறைந்து சேமிப்பானது அதிகரிக்கிறது. அதன் காரணமாக அறிவானது கூர்மையாகிறது. மேலும் ஆறு தீய குணங்களையும் நற்குணங்களாக மாற்றும் திறன் அதிகரிக்கிறது. மேலும் ஆழ்ந்த தவத்திற்கு(தியானம்) செல்லும்போது மன அலைச்சுழல் மேலும் குறைந்து தீட்டா அலைக்கு(விநாடிக்கு 4 முதல் 7 சுழல்) செல்கிறது. மனமானது சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள்,அண்டங்கள், வரை விரிவடைகிறது. 

விண்களைக் கொண்ட களமாக மனமானது பிரபஞ்சத்தை உணர்ந்து ஆழ்நிலையை அடைகிறது. ஆழ்ந்து மனமானது மேலும் செல்லும் போது டெல்டா அலைக்கு(விநாடிக்கு 1 முதல் 3 சுழல்) செல்கிறது. அப்போது பிரபஞ்சத்தை எல்லாம் கடந்து மனமானது சுத்தவெளி என்ற இறைநிலையோடு கலந்து விடுகிறது. மனமானது இறைநிலையோடு கலந்து விடும் நிலையையே சமாதி எனக் கூறுகிறோம்.

மனித மனமானது பொதுவாக பீட்டா அலையில் செயல்படுகிறது. அந்த நிலையில் மனமானது உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருக்கும். மனமானது சில நேரங்களில் ஆழ்ந்த சிந்தனையில் ஆல்பா அலைக்கு வருகிறது. ஒரு சிலரின் மனமானது தீட்டா அலைக்கு வருகிறது. அனைவராலும் மனதை நுண்ணிய அலைக்கு கொண்டு செல்ல முடியும். மனதை நுண்ணிய அலைக்கு கொண்டுவர தவம் செய்ய வேண்டும்.


பதிவுகள்:

ஒரு குறிப்பிட்ட மன அலைச்சுழலில் ஒவ்வொரு அனுபவமும் உண்டாகிறது. ஜீவகாந்தத்தில் அந்தந்த  மன அலைச்சுழலில் அந்தந்த அனுபவங்கள் பதிவாகின்றன. உதாரணமாக மனமானது வினாடிக்கு 14 அலைச்சுழலில் இயங்குவதாக வைத்துக் கொள்வோம். மாணவர்கள் தேர்வு எழுதும் போது ஒருவித பதட்டத்தில் இருக்கும் போது, அவர்களுடைய மன அலைச்சுழல்(வினாடிக்கு 18 அலைச்சுழலாக)

அதிகரித்து விடுவதன் காரணமாக, மாணவர்களுக்கு குறைந்த மன அலைச்சூழலில் பதிவான பாடங்கள் எதுவும் நினைவுக்கு வருவதில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு, மனமானது 14 அலைச் சுழலுக்கு வரும்போது, மனமானது அமைதி அடைந்து படித்த பாடங்கள் அனைத்தும் நினைவுக்கு வருகின்றன. நாம் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் வஞ்சம், கோபம் போன்ற செயல்களை செய்யும்போது உண்டாக கூடிய தீய எண்ணங்கள் வினாடிக்கு 20க்கும் அதிகமான அலைச்சூழலில் பதிவாகின்றன.

மன அலைச்சூழல் 40 அலை சுழலுக்கு மேல் மரணம் ஏற்படும். மன அலைச்சுழலானது 14 க்கும்  கீழாக இருக்கும்போது உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருந்து விடுபட்டு அமைதி நிலைக்கு செல்கிறது, அப்போது ஒரு தெளிவானது உண்டாகிறது. மன அலைச்சூழல் இந்த நிலையில் இருக்கும்போது ஆழ்ந்த சிந்தனை ஆற்றலால் அறிவு நுட்பம் பெருகி, உண்மைகளை உணர முடியும். புலன்களை மனிதன் இயக்கும் போது பஞ்சதன் மாத்திரையை அனுபவங்களாக புலன்கள் மூலமாக பெறுகிறான். அப்போது, அவனுடையை ஜீவகாந்த அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்று ஐந்தாக மாற்றமடைகிறது.

மனித மனமானது புலன் இயக்கத்தில் 15 முதல் 40 சுழல் வரை வினாடிக்கு இயங்குகிறது. ஒரு செயலை எந்த மன அலைச்சுழலில் செய்கிறோமோ, அந்த செயல் மூலமாக ஒரு அனுபவத்தை பெறப்பட்டதோ, மீண்டும் அதே மன அலைச்சூழலில்  விரைவுக்கு மனம் வரும்போது, அகக் காட்சியாக அதே செயலை எண்ணமாக தோன்ற செய்கிறது. இதன் காரணமாக வினாடிக்கு 14 முதல் 40 அலைச்சுழல் வரை புலன் வழியாக செய்த எல்லா  விளைவுகளும் பதிவாகின்றது. 

ஒரு செயல் எந்த அலைச்சுழலில்  அதிக முறை செய்யப்பட்டதோ அந்த அலைச்சுழலானது வலுப்பெற்றதாகிவிடும். அதனால்தான் எந்த ஒரு செயலும் பழக்கமாகி விடும்போது திரும்பவும் அதற்கேற்ற எண்ணங்களே தோன்றி தானாகவே பல முறை இயங்கும். இத்தகைய பதிவானது ஒரு முறை உண்டானால், அதே பதிவுகள் மீண்டும் மீண்டும் விரிவு பெற்று இயங்குவதும், எண்ணங்கள் மற்றும் செயல்கள் அனைத்தும் உண்டாகுவது பழக்கம் ஆகிவிடுகின்றன.

மனிதன் இந்த பழக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, மன அலைச்சுழலின்  விரைவை குறைக்க வேண்டும்;மாற்ற வேண்டும். மன அலைச்சூழலின் விரைவை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மன அலைச்சூழல் விரைவை சரியாக கணக்கிட்டு தேவைப்படும்போது தேவையான அகக்காட்சியை பெறுவது என்பது மனிதனுக்கு அரிதான செயலாகும். அகத்தவத்தின்(தியானம்) மூலமாக உயிர் மேல் தவம் செய்து மன அலைச்சுழலை குறைக்க பழகிகொள்ள வேண்டும்.

 கருமையத்தில் மனம் அதன் அனுபவங்களை சுருக்கிப் பதிவு செய்கிறது. மீண்டும் எண்ணமாக விரித்து பதிவு செய்தவற்றை அக்காட்சியாக காட்டுகிறது. எண்ணம், சொல், செயல், விளைவு, பதிவு, இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எண்ணமானது மனதில் தோன்றுகிறது. 

நாம் சொற்களின் மூலமாக எண்ணத்தை வெளிப்படுத்துகிறோம். அதற்கான செயலை செய்ய முற்படுகிறோம். அதற்கேற்ற விளைவு உண்டாகிறது. இவை அனைத்தும் கருமையத்தில் பதிவாகின்றன. இப்பதிவுகளை மனம் கருமயத்தில் இருந்து மீண்டும் எண்ணங்களாக விரித்து காட்டுகிறது.


சஞ்சீத கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம்:- 

நமது முன்னோர்களின் கருத்தொடராக ஜீவகாந்தத்தில் உள்ள பதிவுகள் பிறவியின் மூலமாக நமது பதிவுகளாக நமக்கு வந்து விடுகின்றன. இந்தப் பதிவுகள் கருவின் மூலமாக வருவதனால் சஞ்சீத கர்மம் அல்லது கருவமைப்பு பதிவுகள் என கூறுகிறோம். நமது செயல்களால்  பிறப்பிற்கு பிறகு கருமையம் அடைகின்ற பதிவுகளை பிராரப்த கர்மம் அல்லது மேல்அடுக்குப் பதிவுகள் எனக் கூறுகிறோம். மேல் அடுக்கு பதிவுகளும், கருவமைப்பு பதிவுகளும் சேர்ந்து ஒரு மனிதனுடைய அறிவு ஆட்சி தரமாக(personality) அமைகிறது. இதை ஒட்டிய செயல்பாடுகளினால் நான் பெறக்கூடிய பதிவுகள் அனைத்தும் ஆகாமிய கர்மம் என கூறுகிறோம். மனித வாழ்வானது இந்த மூன்று கர்மங்களின் வழியாகவே நடைபெறுகிறது.


கலைச்சொற்கள்:-

  • சஞ்சீத கர்மம்
  •  பிராரப்த கர்மம்
  • ஆகாமிய கர்மம்
  • சுழற்சி,
  • அலைசூழல்
  • புலன்கள்
  • கருவமைப்பு
  •  டெல்டா
  • ஆல்பா
  •  பீட்டா
  •  தீட்டா
  •  வஞ்சம்
  • கோபம்
  •  உணர்ச்சி நிலை

:- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

Tags

Post a Comment

0 Comments