Type Here to Get Search Results !

பத்து படிநிலைகளில் மனம் அறிவாக இயங்குகிறது. உயிரின் படர்க்கை நிலையே மனம்

0

 

மனதின் படிநிலைகள்:-

பத்து படிநிலைகளில் மனம் அறிவாக இயங்குகிறது. அவை:-


1. உணர்ச்சி

2. தேவை

3. முயற்சி

4. செயல்

 5. விளைவு

6. அனுபோகம்

7. அனுபவம்

8. ஆராய்ச்சி

 9. தெளிவு 

10. முடிவு


உடலில் ஜீவகாந்த ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது ஏற்படும். ஜீவகாந்த ஆற்றல்  அந்த இடத்தில் மின் சக்தியாக தன்மாற்றம் அடைந்து சிதறுகிறது. இதை துன்பமாக மனம் பொருந்தாத உணர்வாக உணர்கிறது. உயிரின் மையத்தில் இருக்கும் மனம், அறிவு என்ற நிலைக்கு வரும் முதல் படியையே உணர்ச்சி என கூறுகிறோம். 

அந்தத் துன்பத்தை உணர்ந்து விட்ட பிறகு, அந்த துன்பத்தில் இருந்து விடுபட நினைக்கிறோம், அதற்கு பிறருடைய உதவியோ, மாற்றமோ, இடமோ நமக்கு தேவை. அவற்றின் மூலமாக நாம் அதை சரி செய்து கொள்ளலாம். எனவே, நபரைக் கொண்டு, பொருளைக் கொண்டு, எந்த செயலை செய்தால் அது சரியாகுமோ அதை நாம் நாடுகிறோம். இதனையே தேவை எனக் கூறுகிறோம். 

முதலாவதாக உணர்ச்சி உணர்வானது வந்தது. அந்த உணர்ச்சியிலிருந்து இரண்டாவதாக வரும் எழுச்சியே தேவை என கூறுகிறோம். உதாரணமாக பசியானது நமக்கு ஏற்படுகிறது. அந்த பசியை நாம் போக்குவதற்காக உணவானது தேவைப்படுகிறது. 

தேவை என்று வரும்போது ஓரளவு அழுத்தம் வந்தவுடன், அந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக முயற்சியானது தோன்றுகிறது. நமது மனமானது முயற்சியை மேற்கொள்கிறது. மனமானது மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும்போது செயலானது உருவாகிறது. கை,கால் போன்ற கருவிகளைக் கொண்டு அந்த செயலை செய்து தேவையை பூர்த்தி செய்கிறது. உடலுக்கும், மனதிற்கும் ஒத்திசைவு ஏற்பட்டு, உடல் கருவிகள் அதற்கேற்றார் போல இயங்குவது செயல் எனக் கூறப்படுகிறது.

 இயற்க்கையின் ஒழுங்கமைப்பின்படி அந்த செயலில் இருந்து விளைவு உண்டாகிறது. கவலை, இன்பம், துன்பம், மகிழ்ச்சி என்ற ஏதாவது ஒரு விளைவுகள் ஏற்படுகிறது. அந்த விளைவை இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ உணரும் நிலையை அனுபோகம் எனப் கூறுகிறோம். உயிர் ஆற்றலின் விரயம் காரணமாக ஏற்படக்கூடிய மாற்றமே அனுபோகம் ஆகும்.

அனுபவம் என்பது  வேறு, அனுபோகம் என்பது வேறு. முன் நடந்ததை மனதால் நினைத்துப் பார்ப்பது அனுபவமாகும், ஒரு செயலால் ஏற்படக்கூடிய இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ அனுபவம் என கூறுகிறோம். நமது கருமையத்தில் அனுபோகம் பதிவாகி மறுநாளோ அல்லது பல நாட்கள் கடந்த பிறகு நினைத்துப் பார்க்கும்போது இந்த செயலை செய்தேன், அதற்கு ஏற்ற விளைவு ஏற்பட்டது என்று உணர்ந்து கொள்வது தான் அனுபவம் ஆகும்.

 எடுத்துக்காட்டாக, ஒரு வாரத்திற்கு முன் உறவினர் வீட்டிற்கு சென்றேன், அங்கு சாப்பிட்ட உணவு மிகவும் சுவையாக இருந்தது என்று உணர்வது அனுபவமாகும். அனுபோகங்களின் வெளிப்பாடே அனுபவமாகும். நாம்  ஒரு செயலை செய்து இருப்போம். அந்த செயலால் ஏற்பட்ட விளைவைக் கொண்டு இனி எவ்வாறு செய்யலாம் என்று யோசிப்பது ஆராய்ச்சியாகும். 

அந்த ஆராய்ச்சியின் மூலமாக " இப்படி தான் பொருளோடு தொடர்பு கொள்ள வேண்டும்','இவ்வாறு செய்ய வேண்டும் என்று முன்பு ஏற்பட்ட அனுபவம், தற்கால சூழ்நிலை, எதிர்கால விளைவுகள் இவற்றை கணித்து செய்யும் போது தெளிவானது உண்டாகிறது. பிறகு அந்த தெளிவிலிருந்து, எல்லாவற்றையும் தொகுத்து முடிவானது ஏற்படுகிறது.

இவ்வாறு நாம் பொருட்களோடு தொடர்பு கொண்டு செயல்படும்போது, எந்தெந்த அனுபவங்கள் மூலமாக நாம் அதை பெற்று இருக்கிறோமோ, அவை அனைத்தும் மனதால் நடைபெற்றன. உணர்வு, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபவம், அனுபோகம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு இவற்றால் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் இணைந்த இயக்க விரிவான அறிவின் படர்க்கை நிலை அல்லது உயிரின் படர்க்கை நிலையே மனம் எனக் கூறப்படுகிறது.

:- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

Tags

Post a Comment

0 Comments