Type Here to Get Search Results !

ஞானம் பெற்றவன் உலகத்தை படைத்தவன் அதனால் அவன் எப்போதும் கடவுளை வணங்க மாட்டான்

0

யோகம்

 யோகம் செய்பவன் வாழ்க்கையில் மகிழ்ச்சியை எவ்வாறு வர வைப்பது என்பதில் கவனமாய் இருப்பான். இவ்வுலகில் ஒரு சொர்க்கத்தை உருவாக்குவான். எல்லா கணத்தையும் மிகப்பெரிய பரவசத்தை உருவாக்குவான். இளமையாகவும் பரவசமாகவும் விழிப்புணர்வாகவும் வாழ்வான். உணர்வுகளில் இளமையாக இருப்பான். ஞானம் பெற்றவன் வேறொரு கிரகத்தில் இருந்து வரப்போவதில்லை. ஞானம் பெற்றவன் உன் புத்துணர்வில் இதயத்தின் மௌனங்களிலும், தியானத்தின் ஆழங்களிலும், இடைவெளியிலும் உன் மகிழ்ச்சியான பாடல்களிலும், உன் பரவசமான நடனங்களிலும், பூமியின் அன்பில் இருப்பவனாக இருக்கிறான். எந்த ஒரு மதமும்,கல்விமுறையும் உலகை நேசிக்க கற்றுக்கொடுப்பதில்லை.

உண்மையாக உள்ளது இந்த மரங்கள் உன் நண்பர்கள், இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் உன் சகோதரர்கள். ஞானம் இல்லாதவன் கல்லறை நோக்கி செல்வதை காணும் போது அவனுடைய மசூதிகளையும், கடவுள்களையும், கோவில்களையும், புனிதமான நூல்களையும், வாழ்க்கை முறையையும், ஏன் அவனையே கூட நிராகரித்து விடுவது உங்களுக்கு எளிமையாகிவிடும். புனிதமான  நூல்கள் உன்னுடைய வாழ்க்கை தான். அத்தகைய உண்மையை யாராலும் எழுத முடியாது.


நீ புத்தகத்தின் வெறும் தாள்களாய் வந்தாய். அந்தப் புத்தகத்தில் நீ என்ன எழுத போகிறாய் என்பதை பொறுத்துதான் அது இருக்கும். பிறப்பு மட்டும் வாழ்வு அல்ல. வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாக உள்ளது. வாழ்க்கையை மிக அழகாக்க கூடியதாகவும், நீங்கள் கனவு காண போதுமான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதாகும். ஞானம் இல்லாத மனிதனுக்கு உண்மையும் கனவும் ஒன்றாக தான் உள்ளது. 


இந்த மண்ணில் அவனுடைய கனவுகள் அனைத்தும் வேறு ஊன்றி இருக்கும். பழங்களையும் பூக்களையும் கொண்டு திரும்ப கொண்டு வரும் வெறும் கனவுகளாக மட்டும் இருக்காது. மொத்த பூமியையும் படைக்க கூடியதாக இருக்கும். பொறுப்புணர்வை உணருங்கள்.இதனால் வரைக்கும் உன் பொறுப்புணர்ச்சிக்கு அந்த பொறுப்பானது கடந்த காலத்தை நிராகரிக்க, அதை உங்களுடைய இருப்பிலிருந்து நீக்கக்கூடிய பொறுப்பாகும். ஆதாம், ஏவாள் ஆக மாறி இந்த பூமியை தோட்டமாக மாற்றுங்கள்.இந்த பூமியில் யார் கடவுள் என்றும் நம்மை விட்டு விரட்டுகிற எந்த கடவுளுக்கும் தைரியம் உள்ளது என்பதை பார்க்கலாம்.

 
நம்முடையதாக தோட்டத்தில் கடவுள் இருக்க விரும்பினால் நம் கதவுகளை அவர் தட்டட்டும். இந்த பூமியை அதிசயமான அற்புதமான உலகமாக நம்மால் மாற்ற முடியும். அந்த சக்தி நம் கைகளுக்கு உண்டு. அதை நாம் பயன்படுத்தவில்லை. அந்த தனித்திறமையை வளர்க்க, மலர செய்ய  வாய்ப்பை கொடுத்ததில்லை. பூக்களை பூமி முழுவதும் பொழிய வைத்ததில்லை. அந்தப் பூவின் மணத்தை பூமி எங்கும் மணக்கச் செய்யவில்லை.

ஞானம் பெற்றவனே படைப்பாளி

அந்தப் பூவின் நறுமணம் தான் என்னை பொருத்தவரையில் கடவுள் தன்மை. ஞானம் பெற்றவன் உலகத்தை படைத்தவன் அதனால் அவன் எப்போதும் கடவுளை வணங்க மாட்டான். அன்பாகவும் அழகாகவும் உண்மையாகவும் நறுமணமாகவும் படைப்பான். அந்தக் கடவுள் இன்று வரை படைப்பாளியாக இருந்தான். அந்த ஞானம் பெற்றவனே படைப்பாளி. அந்தக் கடவுளை நாம் படைப்போம். நம்மால் அந்த இறைத்தன்மையை படைக்க முடியும். அந்த சக்தி நம் கையில் மட்டுமே உள்ளது. உலகம் கண்ட புரட்சிகளிலேயே ஞானம் அடைந்தவன் மிகப்பெரிய புரட்சியாளனாக நான் அழைக்கிறேன்.

இதனை தவிர்க்கவே முடியாது.ஏனெனில் ஞானம் இல்லாதவன் சாவுக்கு தயாராகி விட்டான். தற்கொலை செய்யவும் துணிந்தவனாக இருக்கிறான். அவன் அமைதியாகவே சாகட்டும்.பிரச்சனையை உருவாக்கும் எண்ணம் இருப்பவர்கள் தங்களைத் தானே துண்டித்துக் கொள்ளட்டும். அவர்கள் பாதுகாப்பாளர்களாக இருக்கிறவர்கள். நாம் பழைய உலகத்தையும் அதனுடைய துன்பத்தையும் அறிவோம். நாம் அதனை விட்டு விளக்க முடியும்.நாம் அதன் கோபங்களையும் பொறாமைகளையும் போர்களையும் உலகை அழிக்கக்கூடிய ஆயுதங்களையும் ஒழித்து ஒரு புதிய மாற்றத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

ஒருவருக்கு ஒருவர் சுதந்திரமாகவும் சுவாசிக்கிற மனிதர்களையும் வெகுழியான மனிதர்களையும் நேசிக்கிற மனிதர்களையும் சுதந்திரமானவர்களாக இருக்கக்கூடிய மனிதர்களை படைக்க முடியும். அனைவரும் தன்னம்பிக்கையுடன் கெளவுரவமாவும் வாழக்கூடிய உணர்வை உருவாக்க முடியும். ஒரு மனிதனின் மதிப்பீடுகளையும் கோட்பாடுகளையும் இல்லாத மனிதனை உருவாக்க முடியும். இந்த பூமியில் ஞானம் உள்ளவன் உப்பு சத்தாக  எப்போதும் இருப்பான்.

- ஓஷோ


Tags

Post a Comment

0 Comments